தோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்!

ஜூலை 13, 2019 377

கொல்கத்தா (13 ஜூலை 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் தோனி ரன் அவுட்டை பார்த்து அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

மான்செஸ்டரில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய, நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. அந்த போட்டியில் 50 ரன்களுக்கு தோனி ரன் அவுட் ஆனபோது போட்டியை பார்த்துக்கொண்டிருந்த கொல்கத்தாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் மைட்டி என்பவருக்கு தீடிரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...