என் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் கதறல்: வீடியோ!

ஜூலை 13, 2019 667

லக்னோ (13 ஜூலை 2019): என் தந்தையிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று உத்திர பிரதேச பாஜக எம்.எல்.ஏ மகள் சாக்‌ஷி மிஸ்ரா வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

உத்திர பிரதேச பாஜக எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ராவின் மகள் சாக்சி மிஸ்ரா (23) தலித் இளைஞரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களது காதலுக்கு ரஜேஷ் மிஸ்ரா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே இருவரும் திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் சாக்‌ஷி மிஸ்ரா தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் உபி போலீஸ் சாக்சிக்கும் அவரது கணவருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இல்லையேல் இருவரும் ராஜேஷ் மிஸ்ராவால் கொல்லப் பட்டு விடுவோம் என்றும் கண்ணீருடம் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...