முஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை!

ஜூலை 15, 2019 656

ஜெய்பூர் (15 ஜூலை 2019): ராஜஸ்தானில் முஸ்லிம் காவல்துறை அதிகாரி ஒருவர் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

அப்துல் கனி (48) என்ற தலைமை கான்ஸ்டபிள் வழக்கு தொடர்பாக விசாரணையை முடித்து விட்டு ஹமிலாகிபர் என்ற கிராமத்திலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது, பிம் பகுதியில் அவரை வழிமறித்த மர்ம கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.

படுகாயம் அடைந்த அப்துல் கனி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அப்துல் கனி உயிரிழந்தார்.

இதனிடையே இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி மூலம் கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...