வெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்!

ஜூலை 17, 2019 546

புதுடெல்லி (17 ஜூலை 2019): வெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்கள் தொடர்பு கொள்ள இலவச தொலைபேசி எண் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது

நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் மட்டுக்கறி, ஜெய் ஸ்ரீராம் உள்ளிட்ட காரணங்களைக் காட்டி முஸ்லிம்கள், தலித்துகள் அதிக அளவில் பாதிக்கப் படுகின்றனர். பலர் கொலை செய்யப் படுகின்றனர். பலர் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

அரசும் இதனை கண்டு கொள்வதில்லை. குற்றவாளிகள் இலகுவாக வழக்கிலிருந்து வெளியாகிவிடுகின்றனர்.

இந்நிலையில் வழக்கறிஞர்கள், அறிஞர்கள், கல்வியாளர்களை உள்ளடக்கிய நேஷனல் பிரஸ் கிளப் புதிய இலவச தொலைபேசி (Toll Free No.) எண் அறிமுகப் படுத்தியுள்ளது. அதன்படி, வெறுக்கத்தக்க சம்பவங்களால் நாட்டில் எப்பகுதியில் பாதிக்கப் பட்டாலும், அவர்கள் உடனடியாக இலவச எண்ணை தொடர்பு கொண்டால் உடனடி உதவி கிடைக்கும் வகையில் இந்த எண் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.

இலவச தொலைபேசி எண்: Toll-free number is 1800-3133-600-00,

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...