பீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி!

ஜூலை 18, 2019 209

பாட்னா (18 ஜூலை 20190: பீகார் மழை வெள்ளத்திற்கு இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்யும் மழையால் அம்மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகின. இங்கு வசிக்கும் சுமார் 25 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இடைவிடாது பெய்த மழையால் பீகாரில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளநீர் அபாயக்கட்டத்தை கடந்து பெருக்கெடுத்து ஓடுகிறது.

நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அங்கு வசித்த பல ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 67-ஆக அதிகரித்துள்ளது என மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...