காங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்!

ஜூலை 19, 2019 349

புதுடெல்லி (19 ஜூலை 2019): "நான் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பியவர் நெல்சன் மண்டேலா" என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

நெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரியங்கா, உலகம் முன்னெப்போதையும்விட இன்று நெல்சன் மண்டேலா போன்றவர்களை அதிகம் இழந்துவருகிறது. அவரது வாழ்க்கை உண்மை, அன்பு மற்றும் சுதந்திரத்திற்கு ஒரு சான்றாக திகழ்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நெல்சன் மண்டேலாவை 'அங்கிள்’ என அழைத்து அவர் தனது உத்வேகமாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார் என்றும் வேறுயாரையும் விட நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

காங்கிரஸில் ஏற்பட்டுள்ள தற்போதைய குழப்பங்களான சூழ்நிலையில் இந்த பதிவின் மூலம் காங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி ஏதோன் சொல்ல வருகிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...