கடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு!

ஜூலை 19, 2019 586

புதுடெல்லி (19 ஜூலை 2019): கடவுளின் பெயரால் வன்முறை, படுகொலைகள் நாட்டில் அதிகரித்துள்ள நிலையில் பிரபல நாடக, இசை கலைஞர் எஸ். ரகுநாதந்தனா அவருக்கு வழங்கப்பட்ட விருதை ஏற்க மறுத்துள்ளார்.

மத்திய அரசு ரகுநாதந்தனாவுக்கு சங்கீத நாடக அகாடமி விருது அறிவித்திருந்தது. இந்நிலையில் இதனை ஏற்க மறுத்துள்ள அவர் இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "கடவுளின் பெயரால் நாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ளன. நேரடியாகவோ, மறைமுகமாகவோ இதனை மத்திய அரசு ஆதரிக்கிறது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும் பல சமூக ஆர்வலர்கள், மத்திய அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப் பட்டுள்ளனர். கண்ணையா குமார் போன்றவர்களை உதாரணமாக கூறலாம். இதற்கெல்லாம் மத்திய அரசு எந்த பதிலும் தரவில்லை. எனவே எனக்கு அறிவிக்கப் பட்டுள்ள விருதை ஏற்க மறுக்கிறேன்" என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...