டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்!

ஜூலை 20, 2019 261

புதுடெல்லி (20 ஜூலை 2019): டெல்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் (81) இன்று காலமானார்.

1988-ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை டெல்லி முதல்வராக 15 ஆண்டுகளாக பதவி வகித்தவர் ஷீலா தீட்சித். முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இணை மந்திரியாகவும் பொறுப்பு வகித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இன்று காலை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷீலா தீட்சித் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 81.

இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...