இஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை!

ஜூலை 21, 2019 234

புதுடெல்லி (21 ஜூலை 2019): இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9 ஆம் தேதி இந்தியா வருகிறார்.

2014 ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்றது முதல் இஸ்ரேல் இந்தியா இடையே உறவு வலுவடைந்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஜெருசலேம் சென்றார், அதன் பின்னர் பெஞ்சமின் நேதன்யாகு கடந்த (2018) ஆண்டில் அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வந்திருந்தார்.

இந்நிலையில், பெஞ்சமின் நேதன்யாகு, பிரதமர் மோடியை சந்திப்பதற்காக செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா வருவதாக இஸ்ரேல் அரசு வட்டாரங்கள் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் பயணமாக மட்டும் டெல்லி வரும் பெஞ்சமின் நேதன்யாகுவின் நிகழ்ச்சி நிரல்கள் தொடர்பாக இந்திய அரசின் சார்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...