பயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை!

ஜூலை 22, 2019 939

புதுடெல்லி (22 ஜூலை 2019): பயங்கரவாதத்திற்கு உதவியதாக கைதான நான்கு பேர் மீதான வழக்கை என்.ஐ.ஏ வாபஸ் பெற்றுள்ளது.

பயங்கரவாதத்திற்கு துணை போனதாக என்.ஐ.ஏ, கடந்த டிசம்பர் மாதம் 14 பேரை டெல்லியில் கைது செய்தது.

இந்நிலையில் கைதானவர்களில், முஹம்மது இர்ஷாத், ரயீஸ் அஹமது, முஹம்மது அசாம் மற்றும் செய்யது மாலிக் ஆகியோர் மீது போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் மீதான வழக்கை என்.ஐ.ஏ திரும்பப் பெற்றுள்ளது. மேலும் அவர்கள் நான்கு பேரும் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.

ஆனால் மற்ற 10 பேர் மீது என்.ஐ.ஏ பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...