பாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு!

ஜூலை 22, 2019 607

போபால் (22 ஜூலை 2019): கழிவறைகளை சுத்தம் செய்ய நான் எம்பி ஆகவில்லை என்று பேசி சிக்கலில் சிக்கியுள்ளார் பாஜக எம்பி பிரக்யாசிங் தாகூர்.

சமீபத்தில் போபால் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க தொண்டர் ஒருவர், தனது பகுதியில் சுகாதாரமற்ற சூழல் இருப்பதாகவும் அதனைக் களையவேண்டும் எனவும் பிரக்யா தாக்கூரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில், போபால் தொகுதிக்குட்பட்ட செஹோர் பகுதியில் பா.ஜ.க கூட்டத்தில் பிரக்யா தாக்கூர் கலந்துகொண்டு பேசினார்.

அந்த கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது, “உங்களது கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு நான் எம்.பி-யாக தேர்வு செய்யப்படவில்லை. அதனை முதலில் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் பகுதியில் இருக்கும் குறைகளை உள்ளூர் பிரதிநிதிகளை வைத்து சரி செய்துகொள்ளுங்கள். என்னை அடிக்கடி போன் மூலம் அழைத்து தொந்தரவு செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த தடாலடியான பேச்சு பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரக்யா தாக்கூரின் இந்தப் பேச்சைக் கேட்ட அப்பகுதி மக்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...