சர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கியுள்ள முஸ்லிம் எம்.எல்.ஏ!

ஜூலை 22, 2019 611

லக்னோ (22 ஜூலை 2019): பாஜக ஆதரவாளர்கள் கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள் என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் முஸ்லிம் எம்.எல்.ஏ ஒருவர்.

உத்திர பிரதேசம் மாநிலம் கைரானா தொகுதி சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.ஏ, நாஹித் ஹசன் பேசிய ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதில் பாஜக ஆதரவாளர்கள் வைத்திருக்கும் கடைகளில் பொருட்கள் யாரும் வாங்கக் கூடாது என்று பேசுவதாக அமைந்துள்ளது. முஸ்லிம் எம்.எல்.ஏவின் இவ்வாறான பேச்சு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...