கடும் எதிர்ப்புகளை மீறி தகவல் அறியும் உரிமைகள் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

ஜூலை 23, 2019 591

புதுடெல்லி (23 ஜூலை 2019): கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தகவல் அறியும் உரிமைகள் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டம் கடந்த 2005ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தில் மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு, தேர்தல் ஆணையருக்கு இணையான அதிகாரம் வழங்கப்பட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இதுவரை பல்வேறு தகவல்கள் அம்பலமாகியுள்ளன. அரசுத் துறைகளின் போதாமையை அம்பலப்படுத்தி வந்த ஆர்டிஐ-யின் அதிகாரத்தைக் குறைப்பதன் மூலமாக குடிமக்களின் தகவலறியும் உரிமையையும் கட்டுப்படுத்த நினைக்கிறது பா.ஜ.க அரசு.

இதற்கிடையே, தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத் திருத்தத்தின்படி, மத்திய - மாநில தகவல் ஆணையரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாகக் குறைக்கப்படும். ஊதியம் உள்ளிட்ட விஷயங்களை முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசின் கைகளில் ஒப்படைக்கப்படும்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...