மாட்டுக்கறி - ஜெய் ஸ்ரீராம் பெயரில் நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஜூலை 27, 2019 631

புதுடெல்லி (27 ஜூலை 2019): மாட்டுக்கறியின் பெயராலும் ஜெய் ஸ்ரீராம் பெயராலும் நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக ஆட்சியில் நாட்டில் மதத்தின் பெயரால் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மாட்டுக்கறி, ஜெய் ஸ்ரீராம் பெயரால் முஸ்லிம்கள் தலித்துகள் அதிக அளவில் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில் இந்த தாக்குதல்களை உடனடியாக தடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2018ல் உத்தரவிட்டிருந்தது. இது இப்படியிருக்க தற்போது உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

எனவே ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...