கர்நாடகா அரசியலில் எதிர் பாராத திருப்பம்!

ஜூலை 28, 2019 697

பெங்களூரு (28 ஜூலை 2019): கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பமாக குமாரசாமி பாஜகவை ஆதரிக்கக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் கடந்த வாரம் வரையில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் குமாரசாமி தலைமையிலான அரசு பதவியில் இருந்தது.

குமாரசாமி ஆட்சி அமைந்தது முதலே பல நெருக்கடிகளை சந்தித்து வந்தது. பாஜகவில் சூழ்ச்சியில் சிக்கிய கர்நாடக அரசு, கடந்த ஜூலை 23 அன்று நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் குமாரசாமிக்கு 99 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்து 105 எம்.எல்.ஏ.,க்கள் வாக்களித்தனர். அரசு கவிழ்த நிலையில், தற்போது பா.ஜ.,வை சேர்ந்த எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுள்ளார். அவர் வரும் ஜூலை 29 ல் நம்பிக்கை ஓட்டெடுப்பு கோருகிறார்.

இதனிடையே மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி தான் தங்கள் அரசு கவிழக்காரணம் என்றும், எனவே எடியூரப்பா அரசை ஆதரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அதற்கு குமாரசாமியும் யோசித்து சொல்வதாக கூறியிருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...