முன்னாள் மத்திய அமைச்சர் மரணம்!

ஜூலை 28, 2019 489

ஐதராபாத் (28 ஜுலை 2019):: முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்பால் ரெட்டி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், ஐதராபாத்தின் கச்சிபவுலி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இன்று(ஜூலை 28) அதிகாலை அவர் காலமானார். அவருக்கு மனைவியும் இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டு முறை ஆட்சி அமைத்த போது, அதில் அமைச்சராக அங்கம் வகித்துள்ளார். நான்கு முறை, லோக்சபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...