ஜெய் ஸ்ரீராம் என்று கூற மறுத்த முஸ்லிம் சிறுவன் மீது தீ வைப்பு!

ஜூலை 29, 2019 2488

சந்தாவுலி (29 ஜூலை 2019): உத்திர பிரதேசத்தில் ஜெய் ஸ்ரீராம் கூற மறுத்த 15 வயது முஸ்லிம் சிறுவன் மீது மர்ம கும்பல் தீ வைத்து துன்புறுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் சந்தாவுலி பகுதியில் 15 வயது சிறுவன் நான்கு பயங்கரவாத கும்பலால் கடத்தப் பட்டு கைக்ள் கட்டப் பட்ட நிலையில் துன்புறுத்தப் பட்டுள்ளார். மேலும் அந்த கும்பல் அந்த சிறுவனை ஜெய் ஸ்ரீராம் என கூற வலியுறுத்தியுள்ளது. ஆனால் அந்த சிறுவன் அவ்வாறு கூற மறுக்கவே அந்த கும்பல் அந்த சிறுவன் மீது தீ வைத்துள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை மீட்டு வாரணாசி கபீர் சவுதா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் சிறுவன் அளித்த வாக்கு மூலங்களின் அடிப்படையில் அந்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

60 சதவீத தீ காயங்க உள்ள அந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமீப காலமாக ஜெய் ஸ்ரீராம் என்று கூற மறுப்பவர்கள் கொல்லப்படுவதும், கடும் தாக்குதலுக்கு உள்ளவதும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...