பாஜக எம்.எல்.ஏவால் வன்புணர்வு கொடுமைக்கு உள்ளான பெண் பயணித்த வாகனம் மீது ட்ராக் மோதல்!

ஜூலை 29, 2019 507

லக்னோ (29 ஜூலை 2019): உத்திர பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏவால் பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண் பயணித்த வாகனம் மீது ட்ராக் மோதி விபத்துக்குள்ளாகிய விவகாரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் கடந்த ஆண்டு ஏப்.,13ம் தேதி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், பாலியல் கொடுமைக்கு ஆளான அந்த பெண் தனது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் காரில் ரேபரேலி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அசுர வேகத்தில் வந்த ட்ரக் ஒன்று அவர்கள் சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.

அதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் இருவரும் உயிரிழந்தனர். மேலும், அப்பெண்ணும், அவரின் வழக்கறிஞரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து ஏற்பட்ட நிலையில், ட்ரக்கை ஓட்டி வந்த ஓட்டுநரையும், உரிமையாளரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...