மற்றும் ஒரு அதிர்ச்சி சம்பவம் - ஓய்வு பெற்ற முஸ்லிம் ராணுவ வீரர் அடித்துக் கொலை!

ஜூலை 29, 2019 885

அமேதி (29 ஜூலை 2019): உத்திர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற முஸ்லிம் ராணுவ வீரர் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி அருகே கம்ருலி காவல் நிலையத்துற்கு உட்பட்ட கோடியன் கா புர்வா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அமனுல்லாஹ் (64). இவர் இந்திய ராணுவத்தில் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு முன்னாள் ராணுவ அதிகாரி அமானுல்லாவை சில மர்ம நபர்கள் வீடு புகுந்து கட்டைகளால் சரமாரியாக தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அமானுல்லாவின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கொலையாளிகள் திருடர்கள் என்றும் கூறப்படுகிறது. திருட்டை தடுத்த அமானுல்லாவை அவரது வீட்டில் புகுந்து கொலையாளிகள் தாக்கியதில் அமானுல்லா உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...