முஸ்லிம்களை சிறை நிரப்பத்தான் முத்தலாக் சட்டம் - குலாம் நபி ஆசாத்!

ஜூலை 30, 2019 426

புதுடெல்லி (30 ஜூலை 2019): முஸ்லிம்களை சிறை நிரப்பத்தான் முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று முத்தலாக் சட்டம் நிறைவேற்றப் பட்டது. முன்னதாக இது குறித்த விவாதத்தில் பேசிய மாநிலங்களவைக்கான காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில் ‘‘மத்திய அரசு சமுதாயத்தில் பிளவை உருவாக்க விரும்புகிறது. இந்தச் சட்டம் முஸ்லிம்களை பாதுகாக்காது. அதற்குப் பதிலாக ஜெயில்தான் நிரம்பும்.

ஜெயிலில் இருந்து முஸ்லிம் ஆண்கள் வெளியே வரும்போது அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள். அல்லது கொள்ளைக்காரர்கள், திருடர்களாவார்கள். இதுதான் மசோதாவின் நோக்கம்.

இந்த சட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. சிறுபான்மையினர் தங்களுக்குள் சண்டையிடும் வகையில் அமைந்துள்ளது. கணவன் மற்றும் மனைவி தனித்தனியாக வக்கீல்களை வாடகைக்கு அமர்த்த நேரிடும். வக்கீல்களுக்கு கொடுப்பதற்காக நிலங்கள் விற்கப்பட வேண்டிய நிலை ஏற்படும். ஜெயில் காலம் முடிந்து வெளியே வரும்போது அவர்களிடம் ஏதுமிருக்காது.’’ என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...