முத்தலாக் சட்டத்திற்கு முஸ்லிம் பெண் தலைவர்கள் கடும் எதிர்ப்பு!

ஆகஸ்ட் 01, 2019 292

புதுடெல்லி (01 ஆக 2019): முத்தலாக் தடை சட்டம் முஸ்லிம் பெண்களை பல வகைகளில் பாதிக்கும் என்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய பெண் தலைமை பிரதிநிதி அஸ்மா ஜஹ்ரா தெரிவித்துள்ளார்.

டெல்லி மேல்சபையில் முத்தலாக் சட்டம் நிறைவேற்றப் பட்ட நிலையில், இதுகுறித்து பல்வேறு முஸ்லிம் பெண் பிரதிநிதிகள் அதிருப்தியும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய பெண் தலைமை பிரதிநிதி அஸ்மா ஜஹ்ரா தெரிவிக்கையில், "தலாக் விவகாரத்தில் பெண்களை பாதுகாக்க முஸ்லிம் சட்டம் பல வகைகளில் வழி வகுத்துள்ளது. ஆனா இந்த சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளதால் அதிக அளவில் ஆண்களை விட பெண்கள் பாதிப்படைவார்கள். இச்சட்டத்தால், அவர்கள் வீடுகளை இழப்பார்கள், குழந்தைகளின் எதிர் காலம் பாதிக்கப்படும். முன்பை விட அவர்கள் இப்போதுதான் அதிகம் பாதிக்கப் படுவார்கள்" என்று தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...