மத துவேஷத்துடன் செயல்பட்ட இந்து வாடிக்கையாளருக்கு சரமாரி பதிலடி கொடுத்த உணவு நிறுவன உரிமையாளர்!

ஆகஸ்ட் 01, 2019 341

மும்பை (01 ஆக 2019): முஸ்லிம், தனக்கு உணவு டெலிவரி செய்யக்கூடாது என வாடிக்கையாளர் ஒருவர் எழுப்பிய புகார், மற்றும் அந்த புகாருக்கு ஜோமாட்டோ அளித்த பதில் ஆகியவை கடந்த புதன்கிழமையன்று டிவிட்டரை எட்டியுள்ளது.

கடந்த செவ்வாயன்று ஒரு ஜோமாட்டோ வாடிக்கையாளர் ஜொமாடோவின் உணவு விநியோக சேவை மூலம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ததாக ட்வீட் செய்திருந்தார். தனது உணவை முஸ்லிம் ஜொமாடோ ஊழியர் கொண்டு வந்ததற்காக இந்த டெலிவரியை ரத்து செய்ததாகவும் குறிப்பிட்ட்டிருந்தார்.

"ஒரு முஸ்லீம் ஊழியர் தனக்கு உணவு அளிப்பதை தான் விரும்பவில்லை" என்பதால் அந்த வாடிக்கையாளர் டெலிவரி பாயை மாற்ற ஜோமாட்டோவிடம் வேண்டியுள்ளார். அதற்கு அந்த நிறுவனம் டெலிவரி செய்பவர்களிடையே "பாகுபாடு பார்க்க வேண்டாம்" என பதிலளித்திருந்தது.

இந்த சம்பவம் குறித்து ஜோமாட்டோவின் நிறுவனர் கோயல்,"இந்தியாவின் சிந்தனை மற்றும் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களின் பன்முகத்தன்மை குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என ட்வீட் செய்திருந்தார். "இம்மாதிரியான வாடிக்கையாளர்களிடமிருந்து வணிகத்தை இழப்பது குறித்து நாங்கள் வருத்தப்படவில்லை." என அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜோமாட்டோ நிறுவனம் செய்த ட்வீட்டில், "உணவுக்கு என தனியாக ஒரு மதம் இல்லை. இதுவே ஒரு மதம்.”, எனக் குறிப்பிட்டிருந்தது. ஜோமாட்டோ நிறுவனர் தீபீந்தர் கோயலும் அத்தகைய வாடிக்கையாளர்களின் வியாபாரத்தை இழப்பதில் ஜோமாட்டோ வருத்தப்படப்போவதில்லை என்று கூறியுள்ளார். பல ட்விட்டர் பயனர்கள் நிறுவனத்தின் முடிவைப் பாராட்டியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...