குற்றவாளிகளுக்கு அதிகாரம் கொடுப்பதை ஒப்புக்கொண்ட பாஜக - பிரியங்கா காந்தி விளாசல்!

ஆகஸ்ட் 02, 2019 259

புதுடெல்லி (02 ஆக 2019): குற்றவாளிகளுக்கு அதிகாரங்கள் வழங்குவதை பாஜக ஒப்புக் கொண்டுள்ளது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உன்னாவ் விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள உத்தர பிரதேச கிழக்கு மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, "பா.ஜ.க, இறுதியாக ஒரு குற்றவாளிக்கு அதிகாரம் அளித்ததை ஒப்புக்கொள்கிறது. மேலும் சில நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இனி, அளவற்ற துன்பங்களுக்கு ஆளான ஒரு இளம் பெண்ணுக்கான நீதியின் வழியில் செல்லவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...