நீதிபதிகளை அதிர்ச்சி அடைய வைத்த போலீஸாரின் தகவல்!

ஆகஸ்ட் 03, 2019 322

நகரி (03 ஜூலை 2019): ஆந்திரா சிறையில் உள்ள 27 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர் ஆந்திர போலீஸார்.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் மத்திய சிறைச் சாலை உள்ளது. இங்கு 1500-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த சல்லா எடுகொண்டலு என்பவர் ஒருவர் ஆவார். கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்ற இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி முதல் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் தனக்கு எய்ட்ஸ் நோய் சிகிச்சை பெற வேண்டியதிருப்பதால் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என ஆந்திரா ஐகோர்ட்டில் மனு செய்தார்.

இது தொடர்பாக சிறை அதிகாரிகளிடம் மொத்தம் எத்தனை கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது? அவர்களுக்கு என்னென்ன மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என விளக்கம் கேட்கப்பட்டது.

இதற்கு சிறையில் மொத்தம் 27 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக சிறை அதிகாரிகள் பதில் அளித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் இது தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...