தொடரும் ஜெய் ஸ்ரீராம் தாக்குதல் - குஜராத்தில் முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல்!

ஆகஸ்ட் 03, 2019 382

அஹமதாபாத் (03 ஆக 2019): முஸ்லிம்களை மதவெறி கும்பல்“ஜெய் ஸ்ரீராம்” என வற்புறுத்தி கூறவைப்பதும் மறுத்தால் தாக்குதல் போன்ற சம்பவங்கள் சமீபகாலமாக தொடர்ந்து நடந்துவருகின்றன.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை குஜராத் மாநிலம் கோத்ராவைச் சேர்ந்த இளைஞர்களான சமீர், சல்மான் கீதேலி, சோஹைல் பகத் ஆகியோர் மோட்டார் பைக்கில் கடந்த வியாழக்கிழமை இரவு, தங்களது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே இரண்டு மோட்டார் பைக்கில் வந்த 6 பேர், அவர்களை நிறுத்தி, ஜெய் ஸ்ரீராம் என கோஷம் போடும்படி கூறியுள்ளனர்.

அதற்கு முஸ்லிம் இளைஞர்கள் மறுத்துள்ளனர். இதனால் அவர்களை பைக் செயினாலும், பயங்ரமான ஆயுதங்களாலும் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்களை கொன்று விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

இதன் பிறகு படுகாயம் அடைந்த அவர்களை அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த கோத்ரா போலீஸார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து அந்த கும்பலைச் சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர்.

இவ்விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...