இந்தியா - பாகிஸ்தான் போர் ஹீரோ அப்துல் ஹமீதின் மனைவி மரணம்!

ஆகஸ்ட் 03, 2019 385

காஜிபூர் (03 ஆக 2019): 1965 இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரின் ஹீரோ அப்துல் ஹமீத் மனைவி ரசூலான் பீபி உயிரிழந்தார்.

உத்திர பிரதேசம் மாநிலம் தம்பூர் என்ற கிராமத்தில் வசித்து வந்த ரசூலான் பிபீ அவரது 90 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். ரசூலான் பீபிக்கு நான்கு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

ரசூலான் பீபியின் மரணத்திற்கு உத்திர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரசூலான் பீபீயின் கணவர் அப்துல் ஹமீத் 1965ல் இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு வீர் சக்ரா என்ற உயரிய ராணுவ விருது வழங்கப் பட்டது. இந்த போரில் பாகிஸ்தானின் பல ராணுவ பீரங்கிகளை தாக்கி அழித்த அப்துல் ஹமீத் அதே போரில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...