தொலைக் காட்சி விவாத நிகழ்ச்சியில் அதிர்ச்சி!

ஆகஸ்ட் 03, 2019 808

புதுடெல்லி (03 ஆக 2019): தொலைக் காட்சி விவாத நிகழ்ச்சியில் இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் நடந்து கொண்ட விதம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வட இந்திய 24 நியூஸ் சேனலில் ஜேமோட்டோ விவகாரம் தொடர்பாக விவாத நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த விவாத நிகழ்ச்சியில் ”ஹம் ஹிந்து” என்ற ஹிந்து அமைப்பினைச் சேர்ந்த அஜய் கௌதம் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின் இடையில் ”காலித்” என்ற இஸ்லாமிய தொகுப்பாளர் தோன்றி, ஒரு குறிப்பிட்ட பகுதியை தொகுத்து வழங்கியுள்ளார். அப்போது அந்த தொகுப்பாளரைத் தான் பார்க்கமாட்டேன் என கூறி, இரு கைகளாலும் தன் கண்களை மூடிகொண்டார்.

இவரின் இந்த செயலைக் குறித்து அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமை எழுத்தாளர் அனுராதா பிரசாத் தனது டிவிட்டர் பக்கத்தில், தொலைக்காட்சியின் செய்தி அறையில், அஜய் கௌதம் கண்டிக்கத்தக்க வகையில் நடந்துகொண்டதை பார்க்க அதிர்ச்சியாக உள்ளது. பத்திரிக்கை நெறிமுறைகளின் படி, அஜய் கௌதமை இனி அழைப்பதில்லை என தொலைக்காட்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது என கூறியுள்ளார். அஜய் கௌதமின் இந்த செயலை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பலர் கடுமையான விமர்சனங்களை பகிர்ந்துவருகிறார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...