தொடரும் பரபரப்பு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமித்ஷா இன்று அறிக்கை!

ஆகஸ்ட் 05, 2019 403

புதுடெல்லி (05 ஆக 2019): நாடாளுமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை அளிக்கவுள்ளார்.

அமித் ஷா இன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவையிலும், இன்று நண்பகல் 12 மணிக்கு மக்களவையிலும் பேசவுள்ளார். இதனால் இரு அவைகளிலும் பாஜக உறுப்பினர்கள் கட்டாயம் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியேற்றப்பட்டனர். கல்லூரிகளில் இருந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து அம்மாநிலத்தில் படை பலம் அதிகரிக்கப்பட்டது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...