காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் துணை நிற்கும் - ஷா மஹ்மூத் குரேஷி!

ஆகஸ்ட் 05, 2019 237

இஸ்லாமாபாத் (05 ஆக 2019): காஷ்மீரை இரண்டாக பிரித்து இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த நேரத்தில் காஷ்மீர் சகோதரர்களுக்கு பாகிஸ்தான் துணை நிற்கிறது. நாங்கள் தொடர்ந்து காஷ்மீர் மக்களுக்கு அரசியல் ரீதியாகவும் மற்ற விதங்களிலும் ஆதரவு தெரிவிப்போம். சர்வதேச முஸ்லிம் சமூகம் இந்தியாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று பாகிஸ்தான் ஊடகமான துனியா நீயுஸிற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய பகுதியாக ஜம்மு-காஷ்மீர் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய பாகிஸ்தான், காஷ்மீர் தொடர்பாக இந்திய அரசு தனிப்பட்ட நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது அம்மாநில மக்களின் விருப்பதிற்கு எதிரானது என்றும் பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது. இந்திய அரசின் சட்டவிரோத முடிவுக்கு எதிராக பாகிஸ்தான் விரைவில் நடவடிக்கை எடுக்கும் எனவும் பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...