மோடி அமித்ஷா மீது நடிகர் சித்தார்த் நேரடி தாக்குதல்!

ஆகஸ்ட் 07, 2019 537

சென்னை (07 ஆக 2019): பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் நேரடியாக தாக்கும் விதத்தில் நடிகர் சித்தார்த் ட்வீட் செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ, 35A நீக்கும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று, மத்திய அரசு நீக்கியது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அறிவித்தார். மேலும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் இதை விமர்சிக்கும் வகையில் ஒரு ட்வீட் ஒன்றை செய்துள்ளார். “நாடு அழிவை நோக்கி பயணிக்கும் ஒருவரின் தலைமையை கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை முற்றிலும் திசை திருப்பும் வேலையாகும். இதையெல்லாம் தெரிந்து கொண்டே தான் செய்கின்றார்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...