காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

ஆகஸ்ட் 07, 2019 289

புதுடெல்லி (07 ஆக 2019): காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நேற்று மாலை வழக்கு தொடரப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தும், காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை ரத்து செய்தும் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிக்கை ஜனாதிபதியின் கையொப்பத்துடன் ஊடகங்களில் வெளியாகின. இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நேற்று மாலை வழக்கு தொடரப்பட்டது. பிரபல வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவரால் தொடரப்பட்ட இந்த வழக்கில் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபையின் ஒப்புதலை பெறாமல் ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை அவசர வழக்காக கருதி இன்று (புதன்கிழமை) விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரரான எம்.எல்.சர்மா வலியுறுத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...