இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்த முடிவு!

ஆகஸ்ட் 08, 2019 503

இஸ்லாமாபாத் (08 ஆக 2019): இந்தியாவுடன் தூதரக, வர்தக உறவுகளை துண்டிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை அடுத்து பாகிஸ்தான் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இவ்விவகாரத்தை ஐ.நாவுக்கு எடுத்துச் செல்லவுள்ளதாக அறிவித்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று பிரதமர் இம்ரான்கான் தலைமையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இதில் நிர்வாக மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்தும், இந்தியாவுடனான உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், இந்தியாவுடன் தூதரக உறவுகளை துண்டித்துக்கொள்வது என்றும், இரு நாடுகள் இடையேயான வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இருநாட்டு இதர உறவுகளை மறுஆய்வு செய்வது, காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டுசெல்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...