கேரளாவை மீண்டும் மிரட்டும் மழை வெள்ளம் - விமானங்கள் ரத்து!

ஆகஸ்ட் 08, 2019 302

திருவனந்தபுரம் (08 ஆக 2019): கேரள மாநிலத்தை சென்ற வருடத்தைப் போலவே மழை வெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கன்னூர், காசர்கோடு, மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளன. கோழிக்கோடு செல்லும் விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் சென்ற வருடம் வரலாறு காணாத மழை வெள்ளத்தால்பாதிக்கப் பட்ட நிலையில், மீண்டும் கேரளாவை மழை வெள்ளம் தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...