முத்தலாக் வழக்கை திரும்பப் பெற மறுத்த பெண் மீது தாக்குதல்!

ஆகஸ்ட் 08, 2019 444

லக்னோ (08 ஆக 2019): முத்தலாக் வழக்கை திரும்பப் பெற மறுத்த பெண் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

உத்திரப் பிரதேசத்தில் சித்தாப்பூர் பகுதியில் பெண் ஒருவரை தொலை பேசியில் முத்தலாக் மூலம் அந்த பெண்ணின் கணவர் விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண்ணின் தாய் போலீசில் புகார் அளித்தார்.. இதனை அடுத்து முத்தலாக் கூறியவர் மீது போலீசார் முத்தலாக் திருத்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இச்சட்டத்தின் மூலம் கணவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.

இந்நிலையில் கணவர் வீட்டர் அந்த பெண்ணை வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி கடுமையாக தாக்கியுள்ளதாகவும் தற்போது அந்த பெண் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பாதிக்கப் பட்ட பெண்ணின் தாய் ஷரீஃபுன் நிசா தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...