தொடரும் கனமழையால் திக்கு முக்காடும் கேரளா!

ஆகஸ்ட் 09, 2019 144

திருவனந்தபுரம் (09 ஆக 2019): கேரளாவில் பெய்து வரும் கனமழையால் கேரள மாநிலமே திக்குமுக்காடுகிறது.

கேரள மாநிலத்தை சென்ற வருடத்தைப் போலவே மழை வெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கன்னூர், காசர்கோடு, மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளன. கொச்சி விமான நிலையம் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை வரை கொச்சி விமான நிலையம் மூடப்படும். அங்கு செல்லும் விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மின் விநியோகம் முற்றிலுமாக துண்டிக்கப் பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப் பட்டுள்ளன.

கேரள மாநிலம் சென்ற வருடம் வரலாறு காணாத மழை வெள்ளத்தால்பாதிக்கப் பட்ட நிலையில், மீண்டும் கேரளாவை மழை வெள்ளம் தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...