முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மருத்துவமனையில் அனுமதி!

ஆகஸ்ட் 10, 2019 297

புதுடெல்லி (09 ஆக 2019): முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

கடந்த பாஜக ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி (66), சமீப காலமாக ஓய்வில் இருந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து டயாலிசிஸ் செய்து வந்தார்.

இந்நிலையில், முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...