கேரளா உள்ளிட்ட மூன்று மாநில மழை வெள்ளத்திற்கு இதுவரை 86 பேர் பலி!

ஆகஸ்ட் 10, 2019 358

மும்பை (10 ஆக 2019): கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 86 பேர் பலியாகியுள்ளனர்.

கேரளாவில் நேற்று (ஆக.,09) மட்டும் 20 பேர் பலியாகி உள்ளனர். வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பல இடங்களில் மிகக் கடுமையான நிலச்சரிவு செய்யப்பட்டு குறைந்தபட்சம் 40 பேர் வரை சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது

கர்நாடகாவில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். குடகு பகுதியில் நடந்த நிலச்சரிவில் ஒரே குடம்பத்தை சேர்ந்த 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 8 பேரை காணவில்லை. கர்நாடகாவில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 1.3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் புனேவில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 29 பேர் பலியாகி உள்ளனர். கிருஷ்ணா, பஞ்சகங்கா ஆறுகளில் தொடர்ந்து வெள்ளநீரானது அபாய அளவை தாண்டி பாய்ந்து வருகிறது. கனமழை காரணமாக மும்பை - பெங்களூரு நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. புனேவில் படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மாயமான 9 பேரை தேடும் பணி நடந்து வருகிறது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...