காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சோனியா காந்தி தேர்வு!

ஆகஸ்ட் 10, 2019 518

புதுடெல்லி (10 ஆக 2019): அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 400 தொகுதிகளில் படுதோல்வியை தழுவியது. இதையடுத்து, மே மாதம் 25-ம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். தனக்கு பதில் புதிய தலைவரை தேர்வு செய்து கொள்ளும்படி அறிவித்தார். ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இதை ஏற்கவில்லை.

அவரை சமரசம் செய்து வந்தனர். ஆனாலும் ராஜினாமாவை திரும்பப்பெற ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். பிரியங்காவை புதிய தலைவராக்க முயற்சி நடந்தபோதும் அதுவும் தோல்வியில் முடிந்தது.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் அறிவித்தார்.

இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் 65 பேர் மற்றும் மாநில தலைவர்கள், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மன்மோகன் சிங் தலைமையிலான 5 குழுக்கள் அமைக்கப்பட்டன. மாநில முதல் அமைச்சர்கள், மாநில தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் அடங்குவர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...