விண்ணைத் தொடும் தங்கத்தின் விலை!

ஆகஸ்ட் 11, 2019 261

புதுடெல்லி (11 ஆக 2019): தங்கத்தின் விலை 28 ஆயிரம் ரூபாயை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்தபடியே உள்ளது. அதில் குறிப்பாக கடந்த 8 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு 1,896 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 68 ரூபாய் அதிகரித்து, 3,547 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் 592 ரூபாய் அதிகரித்து 28,376 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை உயர்வு வாடிக்கையாளார்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...