காஷ்மீரில் கிரிக்கெட் அகடாமி தொடங்கும் தோனி!

ஆகஸ்ட் 12, 2019 233

புதுடெல்லி (12 ஆக 2019): பிசிசிஐ அணியின் முன்னாள் கேப்டன் தோனி காஷ்மீரில் கிரிக்கெட் அகடாமி தொடங்கவுள்ளார்.

மகேந்திர சிங் தோனி.ராணுவத் தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து அவர் ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சிப் பெற்றார். பின்னர் ‘விக்டர் படை’யுடன் இணைந்து காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்க தோனி திட்டமிட்டுள்ளார். அங்குள்ள இளைஞர்களை ஊக்கு விக்க இந்த அகாடமியை தொடங்க இருப்பதாகவும் அங்கு இலவசமாக பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர் பாக மத்திய விளையாட்டு அமைச்சகத்துடன் அவர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...