அதிவேக இணைய சேவை - ரிலையன்ஸ் அறிமுகம்!

ஆகஸ்ட் 12, 2019 281

மும்பை (12 ஆக 2019): அதிவேக இணைய சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.

மும்பையில் இன்று நடைபெற்ற ரிலையன்ஸ் கூட்டத்தில் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி இதனை அறிவித்தார்.

அதன்படி வருகிற செப்டம்பர் 5ம் தேதி முதல் ஃபைபர் கேபிள் வழியான, அதிவேக இன்டெர்நெட் சேவையை வர்த்தக ரீதியாக அறிமுகம் செய்யப்படும் என்றும். மாதந்தோறும் குறைந்தபட்சம் 700 ரூபாய் முதல் இந்த சேவை கிடைக்கும் எனவும் ஒரே ஃபைபர் கேபிள் சேவையில் அதிவேக இண்டெர் நெட், டி.வி. சேனல்கள், புதிய திரைப்படங்களை பார்க்கும் வசதி கிடைக்கும் எனவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...