வாரணாசியை சேர்ந்த சோனி என்ற 19 வயது இந்து பெண் மலேரியாவால் பாதிக்கப் பட்டு உயிரிழந்தார். இவரது தந்தை வாத நோயால் பாதிக்கப் பட்டு நடமாட முடியாமல் உள்ளார். அவரது தாயும் இதய நோயால் பாதிக்கப் பட்டுள்ளார். இவர்களை கவனித்து வந்தது சோனி மட்டுமே. அவருக்கு ஒரு சகோதரரும் உண்டு.
இந்நிலையில் சோனி திடீரென மரணமானதால் சோனி குடும்பத்தினர் திக்கு முக்கடினர். இந்நிலையில் அருகில் உள்ள முஸ்லிம் குடும்பத்தினர் சோனி குடும்பத்தினரை தனது குடும்பமாக நினைத்து சோனியின் இறுதிச் சடங்குகள் செய்ய தயாரானார்கள்.
இதனை அடுத்து முஸ்லிம் இளைஞர்கள் சோனியை இந்து முறைப்படி சடங்குகள் செய்து சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகள் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பலரையும் நெகிழ வைத்துள்ளது.