வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை நெகிழ வைத்த நவ்ஷாத்!

ஆகஸ்ட் 12, 2019 439

திருவனந்தபுரம் (12 ஆக 2019): வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு இலவசமாக உடை வழங்கி, தனது பக்ரீத் பண்டிகையை கொண்டாடியுள்ளார் துணி வியாபாரம் செய்யும் நவ்ஷாத்.

கேரள மாநிலத்தில் கனமழை கொட்டி தீர்த்ததில் அங்கு பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பல மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் துணி வியாபாரம் செய்யும் நவ்ஷாத், பெருநாளுக்காக வியாராபத்திற்கு வைத்திருந்த உடைகளை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கி தனது பக்ரீத் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...