காஷ்மீர் விவகாரம் - அவசர கூட்டத்திற்கு காங்கிரஸ் வலியுறுத்தல்!

ஆகஸ்ட் 13, 2019 374

புதுடெல்லி (13 ஆக 2019): காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அனைத்து எதிர் கட்சிகள் கூட்டம் கூட்ட காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் ஷர்மா கூறுகையில், "அனைத்து எதிர் கட்சிகளும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அவசர கூட்டத்தினை கூட்ட வேண்டும். மேலும் அங்குள்ள நிலமையை கண்டறிய எதிர்கசிகளின் பிரதிநிதிகள் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளுக்கு செல்ல அரசு அனுமதிக்க வேண்டும். மீடியாக்களையும் அனுமதிக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து மீடியாக்கள் மவுனம் காக்கின்ற நிலையில் காங்கிரஸ் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...