பரிதவிக்கும் காஷ்மீர் மக்கள்!

ஆகஸ்ட் 14, 2019 471

ஜம்மு (14 ஆக 2019): காஷ்மீர் மக்கள் உள்ளுரிலேயே அகதிகளாக பரிதவிக்கும் அவலம் தொடர்கிறது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 4ம் தேதியில் இருந்தே ஜம்மு காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், மத்திய அரசோ காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டது என்றும், செல்போன், இணையம், கேபிள் போன்ற சேவைகள் கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறிவருகிறது. இன்றளவும் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் வீட்டுச் சிறையில் அடைபட்டும், காஷ்மீர் மக்கள் சொந்த ஊரிலேயே அகதிகள் போலவும் இருந்து வருகின்றனர்.

பக்ரீத் பண்டிகைக்காக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு பின்னர் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் எந்த ஒரு தொலைத்தொடர்பு வசதியும் இல்லாமல், அவரசத்திற்கு எந்த உதவியையும் நாடமுடியாமல் கதறி அழுகின்றனர்.

தொலைதொடர்பு முற்றிலும் துண்டிக்கப் பட்டதால் வெளி மாநிலங்களில் உள்ள உறவினர்களைக் கூட தொடர்பு கொண்டு அவர்களின் நிலையை உணர்த்த முடியாத நிலையில் உள்ளனர் காஷ்மீர் மக்கள்.

ஜம்மு காஷ்மீர் முழுவதையும் தங்கள் கைவசம் வைத்து முஸ்லிம் மக்களை ஒரேடியாக வெளியேற்றுவதற்கான முன்னேற்பாடாகவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...