மேற்கு வங்க முதல்வர் மமதாவுக்கு அடுத்த அதிர்ச்சி!

ஆகஸ்ட் 14, 2019 575

கொல்கத்தா (14 ஆக 2019) மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் நம்பிக்கைக்குரியவரான சோபன் சாட்டர்ஜி தற்போது பாஜகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேற்கு வங்கத்தை பாஜக தனது கட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் மமதா இதற்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளார்.

இதனை உடைக்க பாஜக முயற்சி மேற்கொண்டது. அதன் ஒருபகுதியாக முன்னாள் ரயில்வே அமைச்சரும், மம்தாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த முகுல் ராயை பாஜக தன் பக்கம் இழுத்தது. மேலும் திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவர் ஆகியோரையும் பாஜக தன் பக்கம் இழுத்துக் கொன்டது

தற்போது அடுத்த கட்டமாக கொல்கத்தா முன்னாள் மேயரும் மம்தாவின் நம்பிக்கைக்கு உரியவரான சோபன் சாட்டர்ஜி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இது மம்தா கட்சிக்கு விழுந்த மற்றொரு அடியாக பார்க்கப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...