பெஹ்லுகான் கொலை வழக்கு தீர்ப்பு வெட்கக்கேடானது - பிரபல நடிகை பரபரப்பு ட்வீட்!

ஆகஸ்ட் 15, 2019 704

மும்பை (15 ஆக 2019): பெஹ்லுகான் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப் பட்டதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார் நடிகை ஸ்வரா பாஸ்கர்.

கடந்த 2017-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெஹ்லுகான் என்ற மாட்டு வியாபாரி பசு பயங்கரவாதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இதில் குற்றவாளிகள் 6 பேரும் ஜெய்ப்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த தீர்ப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்நிலையில் பிரபல இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில், இந்த தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், "இந்த தீர்ப்பு வெட்கக்கேடானது. வீடியோ ஆதாரங்கள், சாட்சிகள் இத்தனை இருந்தும் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பது, நாம் இருண்ட காலத்தில் இருக்கிறோம் என்பதை காட்டுகிறது." என்று தெரிவித்துள்ளார்.

Swara Bhasker

@ReallySwara
Utterly Shameful! This is a lynching that was caught on camera!!! We live in a state of utter anarchy it seems.. the law, the constitution, even evidence it seems are meaningless. Dark dark times!!

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...