மோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்த இஸ்ரத் ஜஹான்!

ஆகஸ்ட் 16, 2019 441

புதுடெல்லி (16 ஆக 2019): முத்தலாக் வழக்கு செயல் படுத்துவதற்கு முக்கிய காரணமாக கூறப்படும் இஸ்ரத் ஜஹான் என்பவர் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இன்ஸ்டன்ட் முறையில் முத்தலாக் வழங்கும் முறை தடை சட்ட மசோதா தற்போது இந்தியாவில் செயல்முறைக்கு வந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுபவர் இஸ்ரத் ஜஹான் என்பவர். இவர் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவரை அவரது கணவர் கடந்த 2014 ஆம் ஆண்டு துபாயிலிருந்து தொலை பேசி வழியாக ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறியுள்ளார். இந்த தலாக் முறையை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றம் வரை சென்றார். ஒரே நேரத்தில் மூன்று முறை முத்தலாக் மூலம் தலாக் கூறுவதற்கு இஸ்லாத்தில் எந்தவித அனுமதியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டத்தை ஒட்டி நேற்று பிரதமர் மோடிக்கு இஸ்ரத் ஜஹான் ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...