காஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்!

ஆகஸ்ட் 16, 2019 392

ஜம்மு (16 ஆக 2019): காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் சிறைபட்டுக் கிடக்கும் நிலையில் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மோடி தலைமையிலான மத்திய அரசு நீக்கியது. மேலும், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மேலும் அம்மாநிலத்தின் முக்கியத் தலைவர்களான ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மெஹ்பூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ", வாய்மையே வெல்லும் என்ற இந்நாட்டின் சொல் சிதறடிக்கப் பட்டுள்ளன. இன்று நாட்டின் பிற பகுதிகள் இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே வேளையில், காஷ்மீரிகள் விலங்குகளைப் போல கூண்டுக்குள் வைக்கப்பட்டு அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

என் மண்ணில் நடக்கும் கொடுமைகளை எழுதினேன்/ பேசினேன் அதற்கு நான் சிறைபட வேண்டுமா? என் பாட்டி என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள் அவர்கள் மகனை பார்க்கக் கூட மன்றாட வேண்டி இருக்கிறது. எங்களுக்கு இழைக்கப்படும் சிதரவதை எங்களுக்கு வலியையும் அவமானத்தையும் ஏற்படுத்துகிறது.

நான் மீண்டும் எதுவும் பேசினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிரும் என்று அச்சுறுத்தப்பட்டேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் கற்பனை செய்ய முடியாத அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு குடிமகனுக்கு பேச உரிமை இல்லை. சிரமமான உண்மையை கூறியதற்காக நான் ஒரு போர்க் குற்றவாளியைப் போல நடத்தப்படுகிறேன் என்பது ஒரு சோகமான முரண்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...