அருண் ஜெட்லி உடல் நிலை கவலைக்கிடம்!

ஆகஸ்ட் 17, 2019 393

புதுடெல்லி (17 ஆக 2019): முன்னள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவின் முந்தைய ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி உடல்நிலை பாதிப்பு காரணமாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் ஜெட்லி போட்டியிடவில்லை. இந்நிலையில், கடந்த 9ம் தேதி திடீரென அருண் ஜெட்லி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவர் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

நேற்று பிற்பகல், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று, அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவினரிடம் விசாரித்தார். இரவு 11.15 மணியளவில், அமித்ஷா, உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரும் மருத்துவமனை சென்று உடல் நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், ஐசியூவில், மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...